நாட்டில் மூன்று ஆண்டுகளில் 1664 கொலைகள்...! வெளியான அறிக்கை
கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் 48 சிறுவர்கள் உட்பட மொத்தம் 1,664 கொலைகள் பதிவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான காவல்துறை செயல்திறன் அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 573 கொலைகளும், 2024 ஆம் ஆண்டில் 555 கொலைகளும் மற்றும் 2025 ஆம் ஆண்டில் 536 கொலைகளும் பதிவாகியுள்ளன.
சிறுவர்கள் கொலை
இந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களில் மொத்தம் 317 பெண்களும் அடங்குவர்.

அதன்படி, 2023 இல் 105 பெண்களும், 2024 இல் 104 பெண்களும் மற்றும் 2025 இல் 108 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மூன்று ஆண்டு காலத்தில் 48 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செயல்திறன் அறிக்கை
வருடாந்த செயல்திறன் அறிக்கைகளின்படி 2023 இல் 16 சிறுவர்களும், 2024 இல் 20 சிறுவர்களும் மற்றும் 2025 இல் 12 சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று ஆண்டு காலத்தில் பதிவான மொத்த கொலை வழக்குகளில் சுமார் 93 சதவீத கொலைகளுக்கான காரணங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான காவல்துறை செயல்திறன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |