யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளாக தொடரும் துயரம்: யாழில் நிலங்களை மீட்க கோரி போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி இ காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
காணி உரிமையாளர்கள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 28 ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
காணிகளை விடுவிக்குமாறு போராட்டம்
பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் 28ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |