நிலுவையில் உள்ள வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பொறுப்பைக் கொண்ட நிறுவனத்திற்கு, மற்றொரு இடத்திலும் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதத்திற்குள் விநியோகம்
அதன்படி, இந்த ஆண்டு ஜூன் முதல் ஓகஸ்ட் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அடுத்த மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடு தயாரிப்புப் பணி வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கும் மற்றொரு இடத்தில் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு அந்த நிறுவனத்திற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 2 மணி நேரம் முன்