செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமக்கப்படும் நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப்பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டம்பர் 19 முதல் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே. சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத்திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 2 மணி நேரம் முன்