மொட்டுக் கட்சியின் பேரணிக்கு பதிலடி! அநுராதபுரத்தில் இன்று களமிறங்கும் அநுர
Anuradhapura
Sri Lankan Peoples
NPP Government
By Dhilak
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அனுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ள இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் "மக்கள் ஆட்சி – இரு வருட வலிமை, அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற பிரச்சாரப் பேரணித் தொடரின் ஒரு பகுதியாக குறித்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுக்கூட்டங்கள்
அதன்படி, முதலாவது பொதுக்கூட்டம் கஹடகஸ்கிலியவில் உள்ள வாராந்தச் சந்தை மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கவுள்ளது.

இரண்டாவது பொதுக்கூட்டம் நொச்சியாகமவில் உள்ள சிங்காரகம மைதானத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது "ஜன சடன" பேரணியை நடத்திய மறுநாளே இந்தப் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்