மொட்டுவின் அனுராதபுர பேரணியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
துமிந்த திசாநாயக்கவிற்கு அழைப்பு
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க அநுராதபுரத்திலேயே உள்ளார். எனவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மாத்திரமே என்னால் அங்கு செல்ல முடியும்.

கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விக்கப்படாத நிலையில், என்னால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது“ என தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |