ஆரம்பமானது போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா!
புதிய இணைப்பு
ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
முதலாம் இணைப்பு
ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |