அமெரிக்கவுக்கு எதிரான ஈரானிய நகர்வு! இந்தியாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் பெஷெஷ்கியன்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு இராஜதந்திரம், மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான போர் ஈரானுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பு
புதுடெல்லியில் தனது இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பில், இரு நாடுகளும் தங்களது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு பெஷெஷ்கியன் விடுத்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச் செயல்களுக்குச் சாட்சியாக இருந்தது என்றும், ஆனால் ஈரானிய மக்கள் தங்கள் முழு பலத்துடன் எதிர்த்து நின்று, அவர்களின் மிரட்டல்களை எதிர்த்து நின்றனர் என்றும் பெஷேஷ்கியன் திரௌபதி முர்முவிடம் கூறியுள்ளார்.
ஈரான் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, மாறாக நாங்கள் எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றோம் என்று அவர் மேலும் அவர் விலக்கியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் நீடித்த அமைதியை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை முர்மு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.