இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை 04:23 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகளுக்கு வடகிழக்கே 69 கிலோமீற்றர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.
தொடர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |