பேராதனை பல்கலையில் ஏற்பட்ட துயரம்! மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்
Kandy
University of Peradeniya
Sri Lankan Peoples
By Dhilak
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவமானது, இன்று(12) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இந்நிலையில், பலத்த காயமடைந்த மாணவர் உடனடியாக பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பேராதனைப் காவல்துறையினரும் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி