ஈரான் எடுத்த முடிவு : உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்ததால், உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சிறிதளவு சரிவைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $108.2 ஆக இருந்தது, இன்று (12) $104.6 ஆகக் குறைந்துள்ளது.அதேபோல், ஒரு பரல் WTI கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $103.3 ஆகப் பதிவானது.
குறைவடைந்த விலைகள்
இருப்பினும், சந்தை அறிக்கைகளின்படி, அந்த வகை கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை இன்று $100 ஆகக் குறைந்துள்ளது.

மேலும், ஒரு பரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $122.4 என்ற உச்சத்தை எட்டியிருந்தது, இன்று அந்த வகை கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை $119.5 ஆகக் குறைந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.
323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |