ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்! 76,000-ஐத் தாண்டிய இடம்பெயர்வு
ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
யேமனின் நிலை ஒவ்வொரு மணி நேரமும் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகவும், இடம்பெயர்வு நெருக்கடி அதிகமாகுவதாகவும் ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) எச்சரித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் குறைந்தது 76,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை ஒரே இரவில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
கடுமையான பாதிப்பு
“சில நாட்களுக்கு முன்பு இந்த மொத்த எண்ணிக்கை 46,000 ஆக இருந்தது. முழு குடும்பங்களும், பெரும்பாலும் இரவில், இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன.

அவர்களுக்குச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்றும், ஏமனின் தென்மேற்கில் உள்ள தைஸ் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
அங்கு கிட்டத்தட்ட 50,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், தெற்கில் உள்ள லஹ்ஜ் நகரில் கிட்டத்தட்ட 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் சண்டைகள் காரணமாக சாலைகள் பயணிக்க முடியாதவையாக மாறி வருகின்றன.
12 ஆண்டுகால மோதலின்போது, இந்தக் குடும்பங்களில் பல இதற்கு முன்பும், சில குடும்பங்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளன,.
நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மற்றும் நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும். நீடிக்கிறது” என IOM அறிக்கையில் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |