சில மணி நேர மழையில் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - இன்று அவசர கலந்துரையாடல்
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின.
ஒரே மழையுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் பல நோயாளர் விடுதிகள் நீரில் மூழ்கின.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
மழைநீர் வடிந்தோடுவதில் சிக்கல்
இந்நிலையில், கொழும்பு நகரில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெறவுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், நகரின் மழைநீர் வடிந்தோடுவதில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |