நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையினால் பல பிரேதசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
இந்நிலையில், களுகங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கலவெள்ளாவ பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு எற்படக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை
மேலும், களுகங்கையின் நீர்மட்டம் புடுபாவுல பகுதியிலும் நில்வளகங்கையின் நீர்மட்டம் தல்கஹாகொட பகுதியிலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டு மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
அதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.