ஹர்தீப் சிங் கொலை : இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்திய விடயம்
காலிஸ்தான் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கனடாவின் விசாரணைகளுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா மற்றும் கனடாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு
இந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று(29) வோஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஹர்தீப் சிங் நிஜாரின் கொலை தொடர்பில் கனடா முன்னெடுக்கும் விசாரணைக்கு இந்தியா, தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழித்தடம் உருவாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஜெய்சங்கர் மற்றும் அண்டனி பிளிங்கன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |