கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொலைமிரட்டல்
Justin Trudeau
Canada
World
By Dilakshan
2 years ago
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
குறித்த நபர் கனேடிய பிரதமருக்கு மட்டுமல்லாமல் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் இற்கும் எதிராக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் ஆயுத குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
அதனை தொடர்ந்து மொன்றியால் நகரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் ஸ்கொட்ஸ்டவுன் பகுதியில் வைத்து இந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
30 வயதான ஜெமெயின் லெமேய் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி