அமெரிக்காவுடன் மோத தயாராகும் வடகொரியா: கிம் ஜோங் உன்னின் அதிரடி அறிவிப்பு
உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது, இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும், எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார் .
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
போர்ப்பயிற்சி
இந்நிலையில், தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கருதுகின்றமையால் அந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் இப்போர்ப்பயிற்சியானது அந்த நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது, எனவே இதனை நேட்டோவின் ஆசிய பதிப்பை இவர்கள் உருவாக்கி வருவதாக வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என கிம் ஜோங் உன் கூறினார், இருப்பினும் இந்த போர்ப்பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தொடர்பில் வடகொரிய அதிபர் கூறுகையில், “உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது, இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும், எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்” என்றார்.