இரத்தினத்தை மறைக்கும் முயற்சியில் அதனை விழுங்கியவருக்கு நேர்ந்த கதி
இரத்தினக்கல் சுரங்க அகழ்வு நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்ட இரத்தினக்கல்லை இரகசியமாக விழுங்கிய நபர் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் உள்ள கூட்டு இரத்தினக்கல் சுரங்கத்தில் பணிப்புரியும் நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினத்தை மறைக்கும் முயற்சியில் மேற்படி நபர் அதனை விழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தொண்டையில் சிக்கியிருந்த கல்
பின்னர் சிரமத்துக்கு உள்ளான நபர் அதனை வெளியில் எடுக்க முயற்சித்தும் அது பயனளிக்காத நிலையில் இரத்தினக்கல் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொண்டையில் கல் சிக்கியிருந்தபோது சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்குச் வைத்தியசாலைக்கு சென்றால் தனது இரகசியம் வெளிப்பட்டுவிடும் என்று சந்தேகத்தில் இரகசியமாக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சென்று, தொண்டையில் கல் சிக்கியிருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.
எனினும் தொண்டையில் சிக்கியிருந்த கல்லை அகற்றும் வைத்தியர்களின் முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கண்டி தேசிய மருத்துவமனையின் காவல் பிரிவு, அந்த நபரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.
சிகிக்கை பெற முயற்சித்ததன் இரகசியம்
இதன்போதே இரத்தினபுரி மருத்துவமனைக்கு செல்லாது கண்டிக்கு வந்து சிகிக்கை பெற முயற்சித்ததன் இரகசியம் வெளிப்பட்டுள்ளது.

மேலும், அவர் ஒரு இரத்தினக்கல்லை விழுங்கியதை அறிந்த மருத்துவமனை காவல்துறை இது குறித்து இரத்தினபுரி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவரது தொண்டையில் இருந்த இரத்தினத்தை அகற்றுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, அந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையிலிருந்து வெலிசர பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |