ரணிலுக்கு பொன்சேகா பதிலடி
Ranil Wickremesinghe
Sarath Fonseka
Sri Lanka Government
By Sumithiran
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா.
இதன்படி இலங்கை குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அரசாங்கத்துடன் கைகோர்க்கப் போவதில்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வித்தியாசமனவர் அல்ல ரணில்

திருடர்கள் நடத்தும் எந்த முயற்சிக்கும் உதவப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க எங்களுடன் இணைந்து பணியாற்றிய போது இருந்ததை விட வித்தியாசமானவர் அல்ல. ஊழலுக்கும் கொள்ளைக்கும் உதவுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. மக்களின் ஆணையைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி