வெள்ளைக் கொடியில் பதிந்த சிவப்பு நிற இரத்த சுவடுகள்!
இலங்கையில் பல ஆண்டுகளாக, தீர்க்கப்பெறாத "வெள்ளைக் கொடி வழக்கு" நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நகர்வை பெற்று வருகிறது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற அநீதியின் அடையாளமாக வெள்ளைக்கொடி விவகாரம் சர்வதேச அரங்குகளிலும் எதிரெலிக்கின்றன.
பழிவாங்கல், இரகசியம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் கலவையின் பக்கங்களாக வெள்ளைக்கொடி அநீதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆவணங்களின் பின்னணி
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்போவதாக அறிவித்ததை நம்பி தமது உறவுகளை வெள்ளைக்கொடியுடன் அனுப்பிய அந்த வழியலுப்பலின் நொடி இன்று வரை திரும்பாத, திரும்பப்பெறாத வடுக்களை தமிழ் மக்கள் மத்தியில் விவரிக்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சில ஆவணங்கள் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக கசிய ஆரம்பித்துள்ளன.
இந்த ஆவணங்களின் பின்னணி ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததாக மார்தட்டி பெறுமைப்பாடும் ராஜபக்சர்களின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவாலும், அவரை மேற்கோள்காட்டியதாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சோடிக்கப்பட்ட ஆதாரங்கள் , சூழ்ச்சி செய்யப்பட்ட சாட்சிகள் மற்றும் அதிகாரத்தின் மிக உயர்ந்த அலுவலகங்களிலிருந்து இயக்கப்பட்ட அரசியல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்புகின்றன.
இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சட்ட ஆலோசகராக இருந்த அலி சப்ரி, பொன்சேகாவை சிறையில் அடைக்க வழிவகுத்த சட்ட சூழ்ச்சிகளைத் தயாரிப்பதில் அல்லது எளிதாக்குவதில் ஈடுபட்டாரா? என்பதை தற்போதைய அவரது கருத்துக்கள் சந்தேகத்துக்குள்ளாக்குகின்றன.
டிசம்பர் 2009 இல், தென்னிலங்கை பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியிலேயே வெள்ளைக்கொடி பிரச்சினை யுத்த காக கருப்பு பங்கங்களில் அடிகோடிடப்பட்டது.
உள்நாட்டுப் போரின் இறுதி மணி நேரத்தில் கோட்டாபயயின் நேரடி உத்தரவின் பேரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் போராளிகள் தூக்கிலிடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஒப்புக்கொண்டதாகக் கூறும் ஒரு கருத்து இதில் வெளியிடப்பட்டது.
ராஜபக்சர்களின் ஆட்சி
இது ராஜபக்சர்களின் ஆட்சியில் அந்தக் கட்டுரை ஒரு அரசியல் பூகம்பத்தை உருவாக்கியது. குறித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட மாபொரும் தலைவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு நடையிட்ட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு இது பேரிடியானது.
வெற்றி எனும் பிரகாசத்தில் திளைத்த ராஜபக்சர்களை பொண்சேகாவின் வெள்ளைக்கொடி காற்று அனைத்துவிட்டதாக அவர்களால் கருதப்பட்டது.
ஆக, இதனை தேசத்துரோகம் என சுட்டிக்காட்டி மகிந்த தரப்புக்கலால் விளக்கப்பட்டது. யுத்தத்துக்கு பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி, ஒரு பொய்யர் என பிரசார மேடைகளில் கைநீட்டப்பட்டார்.
ஆனால் தொடக்கத்திலிருந்தே, பொன்சேகா அந்தக் கூற்றை மறுத்தார். குறித்த கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் என அடித்துக்கூறினார்.
பொன்சேகாவின் கூற்றுப்படி, சரணடைந்த விடுதலைப் புலிகளை தூக்கிலிட கோட்டா உத்தரவிட்டதாக அவர் ஒருபோதும் கூறவில்லை என்றார்.
இருப்பினும், ராஜபக்ச நிர்வாகம் விரைவாக காய்களை நகர்த்தி சிறப்பு உயர் நீதிமன்ற விசாரணைக் குழு வரை விசாரணையை அழைத்து சென்றது.
நேர்காணலைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஐந்து கையால் எழுதப்பட்ட பக்கங்களைக் கொண்ட ஃபிரெட்ரிக்கா ஜான்ஸின் குறிப்பேடு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஐந்து பக்கங்களே இலங்கை இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலின் தலைவிதியை மாற்ற வழிவகுத்தது. இந்த வழக்கு விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு நடத்தியது.
இந்த குழுவுக்கு நீதியரசர் தீபாலி விஜேசுந்தர தலைமை தாங்கினார். இந்த வழக்கு விசாரணைகள் ஒரு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடந்தன.
அப்போது பாதுகாப்பு அமைச்சின் நிழலில் இருந்த சட்டமா அதிபர் துறை, பொன்சேகாவின் தண்டனையை தீவிரமாகப் பின்தொடர்ந்தது.
அரசாங்கக் கட்டுப்பாடு
அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அவரை ஒரு தேசிய அச்சுறுத்தலாக சித்தரித்தன. நவம்பர் 18, 2011 அன்று , "பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய தவறான அறிக்கைகளைப் பரப்பியதற்காக" - தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 இன் கீழ் பொன்சேகா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் .
இந்தத் தீர்ப்பு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆதரவாளர்களுக்கு, இது ஒரு நீதித்துறை படுகொலை என எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் போர்க்களத்தில் எதிரியால் அல்ல, மாறாக அவரது அரசியல் போட்டியாளர்களாளே பின்தள்ளப்பட்டார்.
இதுபோன்ற ஒரு வழக்கு எப்படி நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள, 2009–2011ல் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சுற்றியுள்ள செல்வாக்கு வலையமைப்பு நோட்டமிட்டுக்கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் மிகவும் சக்திவாய்ந்த தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.
இளம் மற்றும் வளர்ந்து வரும் வழக்கறிஞர் அலி சப்ரி (இப்போது ஒரு ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதி மற்றும் முன்னாள் நீதி அமைச்சர்) தலைமையிலான அவரது சட்டக் குழு, நிர்வாகத்தின் சட்டப் போராட்டங்களில் கேடயமாகவும் வாளாகவும் செயல்பட்டது.
அந்தக் காலகட்டத்திலிருந்து கசிந்த பாதுகாப்பு அமைச்சக கடிதப் போக்குவரத்து, தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. இராணுவத்தின் நடத்தை தொடர்பான ஊடக சர்ச்சைகளுக்கு சட்ட ஆலோசகர்கள் பதில்களை வரைவதை இது காட்டுகிறது.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் எழுச்சி, நீண்டகாலமாக புதைந்து கிடக்கும் அரசியல் ஊழல்கள் இறுதியாக மறுபரிசீலனை செய்யப்படும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் தூண்டியுள்ளது.
அவற்றில், வெள்ளைக் கொடி வழக்கை விட பெரியது எதுவுமில்லை. அது ஒரு தேசிய வீரரை குறிவைத்ததால் மட்டுமல்ல, அரசியல் நோக்கங்களுக்காக நீதியை ஆயுதமாக்குவதை அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இலங்கையின் நிறுவனங்களை சுத்தப்படுத்துவதில் NPP நிர்வாகம் தீவிரமாக இருந்தால், பொன்சேகா வழக்கை மீண்டும் திறப்பதைத் தவிர்க்க முடியாது.
அரசியல் அடக்குமுறை
மேலும், அரசாங்கம் அலி சப்ரி மற்றும் பிற முன்னாள் பாதுகாப்பு அமைச்சக சட்ட அதிகாரிகளை சத்தியப்பிரமாணத்தின் கீழ் சாட்சியமளிக்க அழைக்கலாம்.
இது துன்புறுத்தல் செயலாக அல்ல, மாறாக வெளிப்படைத்தன்மையின் செயலாக இருக்கும் என கருதப்படுகிறது. வெள்ளைக் கொடி வழக்கு ஒருபோதும் விடுதலை புலிகளை சரணடைவது பற்றியது அல்ல.
அது நீதி சரணடைவது பற்றியது. இந்த நகர்வு நீதியை கேள்விக்குள்ளாக்குவதோடு, ஒரு சாராரின் அரசியல் அடக்குமுறைகளுக்கு அடிமைப்படுத்தப்பட்ட ஒரு அரச அமைப்பு தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
இப்போது, புதிய சான்றுகள் வெளிவரத் தொடங்கி, பழைய மூடி மறைப்புக்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வருவதால், இலங்கை அரசியல் நகர்ந்த குறுக்குவழியை திரையிட்டுள்ளது.
தற்போதை அரசாங்கம் ஊழல் வழக்கு அரசியல் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுத்துவரும் பந்தைய ஓட்டத்தில் வெள்ளைக்கொடி வழக்குக்கு நீதிப்பாதையை அமைக்குமானால், அதுவே அவர்களின் தங்கப்பதக்கத்துக்கான உயரிய அங்கிகாரமாக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
