உணவு வகைகளின் விலை தொடர்பில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தீர்மானம்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Kalaimathy
நாட்டில் உணவு வகைகளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
தேனீர்களின் விலை
அத்துடன், ஒரு சாதாரண தேநீர் 30 ரூபாய்க்கும், பால் தேநீர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்