மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை
நாட்டில் நேற்று (04) மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.
அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு
உணவு உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று முன்தினம் உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்திருந்தது.
இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |