புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் நிகழ்நிலை மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்பதற்காக செவ்வாய்க் கிழமைகளில் வீட்டுப்பாடங்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்
புதிய சுற்றறிக்கையின்படி, மறு அறிவித்தல் வரை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இயங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுமுறை தினமான புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து சுயமாகக் கற்பதற்கு ஆதரவாக, அவர்களுக்குப் பொருத்தமான பாடங்கள், பயிற்சிகள் மற்றும் பணிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு பாடசாலை அதிபர்களுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |