மிரட்டி பெறப்பட்ட மகிந்தவின் பெயர்! கபிலவின் வாக்குமூலத்தில் திடீர் திருப்பம்

SriLankan Airlines Mahinda Rajapaksa Sri Lankan Peoples
By Dhilak Mar 19, 2026 10:58 AM GMT
Report

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம்தான் முன்பு அளித்த வாக்குமூலம், அச்சுறுத்தலின் பேரில் பெறப்பட்டது என்று குற்றம் சாட்டி, சிறலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், அவரது சட்டத்தரணிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டதாக சந்திரசேன கூறியதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அந்த ரூ. 60 மில்லியன் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாக சந்திரசேன கூறியிருந்தார்.

விவசாயிகளுக்கு இன்று முதல் QR இன்றி எரிபொருள் : வெளியான தகவல்

விவசாயிகளுக்கு இன்று முதல் QR இன்றி எரிபொருள் : வெளியான தகவல்

நீதிமன்ற உத்தரவு

மேலும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு கூடுதலாக ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிரட்டி பெறப்பட்ட மகிந்தவின் பெயர்! கபிலவின் வாக்குமூலத்தில் திடீர் திருப்பம் | New Affidavit Emerges Mahinda Bribery Allegations

அதனை தொடர்ந்து, சந்திரசேனவை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் கோரி அதனை பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் முன்னதாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மார்ச் 18 திகதியிடப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஆணைக்குழுவுக்கு அளித்த தனது வாக்குமூலம் தானாக முன்வந்து அளிக்கப்படவில்லை என்று சந்திரசேன கூறியுள்ளார்.

அச்சம் மற்றும் மிரட்டல்

விசாரணையின் போது, ​​தன்னை பதிவு அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மிரட்டி பெறப்பட்ட மகிந்தவின் பெயர்! கபிலவின் வாக்குமூலத்தில் திடீர் திருப்பம் | New Affidavit Emerges Mahinda Bribery Allegations

கைது செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டதாகவும், தனது வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பெயர்களைச் சேர்க்குமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி நபர்கள் தொடர்பான எந்தவொரு வாக்குமூலமும் அச்சம் மற்றும் மிரட்டலின் பேரிலேயே செய்யப்பட்டதாகவும் அவை தானாக முன்வந்து வழங்க வில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாக்குமூலம் பதிவு செய்யப்படும்போது தனது சட்டத்தரணியை அணுக தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்புக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கப்பல்!

கொழும்புக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கப்பல்!

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! வெளியான பின்னணி

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! வெளியான பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019