இலங்கையின் மாவட்டமொன்றில் கடும் உணவுப்பற்றாக்குறை
Food Shortages
Badulla
Sri Lanka Economic Crisis
By Sumithiran
பதுளை மாவட்டத்தில் 47,665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றில் இது தெரியவந்துள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 05 வயதுக்குட்பட்ட 10,873 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அளுத் கிராமக் - அளுத் கடுக் தேசிய ஒருங்கிணைந்த பங்கேற்பு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி