வரலாற்றில் முதல்முறையாக உலக கிண்ண போட்டியில் களம் இறங்கும் பெண்கள்!
Football
FIFA World Cup
FIFA World Cup Qatar 2022
By pavan
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அல்பேட் மைதானத்தில் ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் பங்கேற்க உள்ளார்.
துணை பெண் நடுவர்கள்
இந்த பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 38 வயதான ஸ்டெபானி ப்ராபர்ட் ( Stephanie Frappart) பெற்றுள்ளார்.
இவருக்கு துணையாக, பிரேசிலை சேர்ந்த (newsa back ) நியூசாபேக் மற்றும் மெக்சிகோவை சேர்ந்த (karen dias medina) கரேன் தியாஸ் மெடினா ஆகிய பெண்களும் பணியாற்ற உள்ளனர்.
இந்த தகவலை, உலகக்கால்பந்து போட்டிகளுக்கான நடுவர்களின் தலைவர் பியர்ளுகி கொலினா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்