புலம்பெயர் தமிழர்களை மீள அழைக்கும் சிறிலங்கா அரசு

Sri Lankan Tamils Ali Sabry Ranil Wickremesinghe Sri Lanka
By pavan Dec 17, 2023 04:01 AM GMT
Report

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எம்முடன் இணைந்து செயற்பட விருப்பமில்லை என்றால் அவர்கள் தாராளமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு உதவிகளை செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

இது குறித்து அவர் தெரிவிக்கையில், தற்போது இலங்கையின் உள்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தீர்வினை எட்டுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்கள்.

ஒப்பரேஷன் துவாரகா ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர்(காணொளி)

ஒப்பரேஷன் துவாரகா ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர்(காணொளி)

தனிநாட்டுக் கோரிக்கை

அதற்காக அவர்கள் கடந்த தேர்தல்களில் ஆணையும் வழங்கியுள்ளார்கள். அவ்வாறான நிலையில், தனிநாட்டுக் கோரிக்கை அல்லது தாயக தேசக் கோரிக்கையானது வெறுமனே ஒருசில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக காலத்தினைக் கடத்தும் செயற்பாடாகவே அமையவுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். அதிகாரப்பகிர்வினைக் கோருகின்றார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களை மீள அழைக்கும் சிறிலங்கா அரசு | Foreign Countries Asylum Claim Tamil Diaspora Eela

எனினும், நடைமுறைச் சாத்தியமான வகையிலான கோரிக்கைகள் பற்றியே சிந்தித்து கலந்துரையாட வேண்டியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதை நோக்கிய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.

அதுமட்டுமன்றி, தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் அதேநேரம் அதற்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை : மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை : மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை

புலம்பெயர் தமிழ் அமைப்பு

ஆகவே, புலம்பெயர் தேசங்களில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் உள்நாட்டு யதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ளாது அவர்கள் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவறாக வழிநடத்துவது பொருத்தமற்ற அணுகுமுறையாகும். இதனால், வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எந்தவிதமான நன்மைகளையும் அடையப்போவதில்லை.

மாறாக, புலம்பெயர் தேச தமிழ் அமைப்புக்கள் மட்டுமே தமது நலன்களை அடைவார்கள்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தமிழர்களை மீள அழைக்கும் சிறிலங்கா அரசு | Foreign Countries Asylum Claim Tamil Diaspora Eela

அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். எம்முடன் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் தாராளமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு உதவிகளை கணிசமாகச் செய்ய முடியும். அதன் மூலம் அம்மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும். அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தடையாக இருக்கப்போவதில்லை.

மேலும் அரசாங்கமும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இதுகால வரையிலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அதற்கான விசேட அறிவிப்புக்கள் காணப்படுகின்றமை சான்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024