வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்து வெளியான தகவல்!
இவ்வருடத்திற்கான, வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்து முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு விசேட தகவலென்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 154 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்கள், வெளிநாட்டு நேரடி முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இதுதவிர உள்நாட்டு முதலீட்டாளர்கள் குறித்த காலப்பகுதியில், 25 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளனர்.
அத்துடன், கடந்த வருடத்தில் நாட்டில் பல பாதகமான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதனை குறித்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |