பைசர் தடுப்பூசிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!
Srilanka
warns
Expired
Channa Jayasumana
Pfizer vaccines
By MKkamshan
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பைசர் பயோன்டெக் கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பயன்படுத்த தவறும் தடுப்பூசிகள் காலாவதியாகும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் பூஸ்டர் டோஸ் ஏற்றுகைக்காக 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியுள்ளது.
ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னமும் ஒன்பது மில்லியன் தடுப்பூசிகள் களஞ்சியச்சாலைகளில் எஞ்சியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெருந்தொகை பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
