இலங்கை மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கால அவகாசம்! நிதியமைச்சின் முக்கிய அறிவித்தல் வெளியானது
இலங்கை வாழ் மக்கள் கைவசம் வைத்துள்ள வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது .
உள்நாட்டில் உள்ள வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.
மேலும், ஓகஸ்ட் 15 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரமளிக்கப்பட்ட வணிகர்
இதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்கில் குறித்த வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியும்.
அத்துடன், உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அங்கீகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு விற்பனை செய்ய முடியுமெனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பணப்பரிமாற்றம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு அந்நிய செலாவணி திணைக்களத்தின் 0112 477 255, 0112 398 511 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது