வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சாணக்கியனின் அழைப்பின் பேரில் சுவிஸ் தூதுவர் விஜயம்!
கிழக்கில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர் நேற்று(புதன்கிழமை) மாலை விஜயம் செய்ந்திருந்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் உற்பட்ட குழுவினர் மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மாவட்டத்தில் தொல்லியன் செயலணி ஊடாக தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த விஜயத்தினை முன்னெடுத்தார்.
பிரச்சினை

குசனார்மலைக்கு வருதைந்த தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தூதுவருக்கு ஆசியும் வழங்கப்பட்டது.
மேலும், குசனார்மலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அப்பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தார்.


