வெளிநாட்டு இனிப்புப் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் தரத்தை பரிசோதிக்க சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உரிய முறையை பின்பற்றாது கொண்டுவரப்படும் இனிப்பு பண்டங்களின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பரிசோதனைக்குட்படாத இனிப்புகள்
கொள்கலன்களில் இவை நாட்டிற்கு கொண்டுவரப்படுவதில்லை என்பதால், துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இனிப்பு வகைகள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பெறப்படவுள்ள உணவுப் பொருட்களின் மாதிரிகள்
இவ்வாறான இனிப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளைப் பெற்று, அவற்றின் தரம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
