இலங்கைக்கு வந்து குவியவுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Sri Lanka
Harin Fernando
By Jaso
இலங்கைக்கு வந்து குவியவுள்ள சுற்றுலாப் பயணிகள்
எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து குவியவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தை விட இந்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருளை வழங்க விசேட வேலைத்திட்டம்
சுற்றுலாத்துறையில் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்