மொட்டுவின் முன்னாள் எம்.பி ஒருவரும் விசாரணை வளையத்துக்குள்
CID - Sri Lanka Police
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Police Investigation
By Jaso
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சட்டவிரோதமாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி, பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
விசாரணைக்கு முன்னிலையாகவில்லை
நேற்று (08) காவல்துறை நிதிக்குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் முன்பும் அவரை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கும் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்