சிகிரியாவை பார்வையிடுவதற்கான கட்டணம் - வெளிநாட்டவர்களுக்கு எவ்வளவு தெரியுமா..!
சிகிரியாவை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பல மடங்கு கட்டணம் அறவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது சிகிரியாவை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகளிடம் 30 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த 30 டொலர்கள் என்பது இலங்கை ரூபாவின்படி சுமார் 10000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு சுற்றுலாப்பயணி

அவ்வாறு பார்வையிட வரும் வெளிநாட்டு பயணி ஒருவர் கிட்டத்தட்ட 10000 ரூபாய் பயணச்சீட்டு பெற வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 9810 ரூபாவும், உள்நாட்டு சுற்றுலாப்பயணிக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளிடம் இவ்வளவு அதிக தொகையை வசூலிக்க கூடாது என சமூக வலைதளங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.