கட்டுநாயக்கவில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது
சட்டவிரோதமாக ரூ. 50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (15.05.2026) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய சீன பெண் தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TG-307 விமானம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த சிகரெட் பொதிகளுடன், முதலில் அவர் தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு பயணம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் TG-307 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சந்தேக நபர் கொண்டுவந்திருந்த இரண்டு பயணப்பைகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 33,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 168 அட்டைப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |