வெளிநாட்டு பெண்ணின் துணிகர செயல்: உயிர் தப்பிய உள்ளூர்வாசி
இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த ஃபரா புத்ரி முல்யானி என்ற மலேசிய பெண் சுற்றுலாப் பயணி, தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் கொண்டிருந்த உள்ளூர் நபரை மீட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணியின் கமராவில் பதிவான காணொளியில் காட்சிகளில், தண்ணீரில் விழுந்த தங்கள் நண்பரை மீட்க அந்த நபரின் நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிடுவது பதிவாகியுள்ளது.
அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பெண் சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி அந்த நபரை உயிருடன் கரைக்கு கொண்டு வருவதைதுடன், அதன் பிறகு அவர் தனது நண்பர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்.
மக்களுக்கான எச்சரிக்கை
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த மலேசிய சுற்றுலாப் பயணி ஃபரா புத்ரி முல்யானி, நீர்வீழ்ச்சி அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை எச்சரித்தார்.
அத்தோடு, குளம் மிகவும் ஆழமாகச் செல்லக்கூடும் என்பதால் நீர்வீழ்ச்சி அபாயங்கள் குறித்து அதிகமான மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான காாணாளி சமூக ஊடகங்களில் வேகமாய் பரவி வருவதுடன், நபரை காப்பாற்றிய பெண்ணுக்கும் பாராட்டக்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
