வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் - வெளியான தகவல்
Sri Lanka
Dollars
By Beulah
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மே மாத புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பணப்பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு 2022 ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் பெறப்பட்ட 1.335 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 2.347 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர், நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை அடைவதற்கு இன்னும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் பணம் அனுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உயர் திறன் ஏற்றுமதி மையம்

அத்துடன், இலங்கையை உயர் திறன் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி