மர்ம ரசாயனங்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்: தொடரும் விசாரணை
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
வெலிகம, சல்மல் உயனவில் ஒரு வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மால்டோவியன் பிரஜையான இவர், சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, மால்டோவியன் பிரஜை அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அவர் வைத்திருந்த இரசாயனப் பொருட்களின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு பகுப்பாய்வாளர் இந்த பொருட்கள் குறித்து விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சந்தேக நபர் மற்றும் ரசாயனப் பொருட்கள் குறித்த மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்