இணையவழிமோசடி : மீண்டும் சிக்கிய வெளிநாட்டவர்கள்
இலங்கையில்(sri lanka) இணையவழி மோசடியில் தொடர்புபட்டுள்ளனரென தெரிவித்து அண்மைய சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சீன(china) பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து கைபேசிகள்,மடிக்கணனிகள், மற்றும் ரவுட்டர்கள் என பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் சிலாபத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்
புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 எத்தியோப்பிய ஆண்கள் மற்றும் ஒரு பெண், கென்யா பெண்ணொருவர் மற்றும் ஒரு சீன ஆண் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இணையவழி பண மோசடி
இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 20 கணனிகள், 3 இணைய ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |