கட்டுநாயக்கவிற்கு வந்த வழியே திருப்பி அனுப்பபட்ட வெளிநாட்டவர்கள்!
மோசடி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 05 பங்களாதேஷ் பிரஜைகளை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னையிலிருந்து 6E 1171 என்ற இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர், அவர்கள் தங்கள் குடியேற்ற முறை சோதனைகளை முடிக்க வரிசையில் காத்திருந்தபோது, தலைமை குடிவரவு அதிகாரி, சந்தேகத்தின் பேரில், அவர்களை விசாரித்துள்ளார்.
சந்தேகநபர்களின் திட்டம்
அதனைதொடர்ந்து, தலைமை குடிவரவு அதிகாரி விசாரணைக்காக அவர்களின் மாசிடோனிய விசாக்களை எல்லை கண்காணிப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, இந்த விசாக்கள் போலியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரித்ததில், சந்தேகநபர்கள் நாட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாக குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இலங்கைக்கு வந்த இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அனுப்புவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
