முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிரடியாக கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka
Deshabandu Tennakoon
By Raghav
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (20.08.2025) இடம்பெற்றுள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபர்
2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.
எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் இன்று நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்