பதுளையில் காட்டுத்தீ - 70 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை
Badulla
Sri Lanka
Climate Change
Weather
By Sathangani
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதேவேளை அடையாளம் தெரியாத தரப்பினரால் கடந்த சில தினங்களில் காட்டுத்தீ வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
70 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி

காட்டுத்தீ தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மஹியங்கனை தம்பான மாவரகல வனப்பகுதியில் தொடர்ந்தும் காட்டுத்தீ பரவி வருவதுடன் இதுவரையில் 70 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி