முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: அரசு அறிவிப்பு
முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் (Pramidha Bandara Tennakone) மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
முன்னாள் படைவீரர்கள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முதல் கட்டமாக இஸ்ரேலில் கட்டுமான துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 67 பேர் இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
ஓய்வு பெற்றுக்கொண்ட 44 வயதுக்கும் குறைந்த படையினருக்கு பயிற்சி வழங்கி பரீட்சை நடாத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |