முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் போதைப் பொருளுடன் கைது!
திருகோணமலை - கிண்ணியாவில் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து ஹசிஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் ஒரு கிராம் 170 மில்லி கிராம் மற்றும் ஹெரோயின் 150 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் என்பவரின் மூத்த மகன் (31வயது) எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிராந்தியத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை போதைப்பொருளுடன் கிண்ணியா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கிண்ணியா காவல்துறையினர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
