மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் IGP - சிறைக்குள் செய்யும் செயல்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயத்தை வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு
இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7