மீண்டும் சேவையில் இணையும் காவல்துறை மா அதிபர்
காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, விக்ரமரத்ன நாளை (9) அல்லது நாளை மறுதினம் (10) பணிக்கு சமூகமளிக்க உள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
சேவை நீடிப்பு

காவல்துறை மா அதிபராக இருந்த விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில்,அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்று மாத காலத்திற்கு அவரின் சேவையை நீடித்தார்.இந்த சேவை நீடிப்பு கடந்த மாதம் ஜூன் 25ம் திகதியுடன் முடிவடைந்தது.
காவல்துறை மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு நடத்தப்படுவதாகவும், ஆனால் சேவை நீடிப்பு நாளில் அவருக்கான அணிவகுப்பு இடம்பெறவில்லை எனவும் காவல்துறை தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விக்ரமரத்ன 2020 இல் காவல்துறை மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்