கைது செய்து அழைத்துச் சென்ற அரசியல்வாதி காவல்நிலையத்தில் உயிரிழப்பு-உறவுகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
arrest
police
death
former pradeshiya-sabha member
By Sumithiran
ஹுங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
போயா தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர (62) ஹுங்கம காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ஹுங்கம காவல்துறையினர் அழைத்துச் சென்றவேளை சிறை அறையில் விழுந்துள்ளார். சந்தேக நபர் பின்னர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சந்தேக நபரின் மரணத்தையடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை ரன்ன பிரதேசத்தில் மறித்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி