அதிரடியாக கைது செய்யப்பட்ட கமாண்டோ சிப்பாய்: பின்னணியில் இருந்த காரணம்
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dhilak
ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்ததாக முன்னாள் கமாண்டோ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரால் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் குறித்த துப்பாக்கி கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணை
பின்னர், அவரை விசாரித்தபோது, ஜா-எல, கொட்டுகொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

37 வயதான சந்தேக நபர், சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர் என்றும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்