விசேட அதிரடிப்படை திடீர் சுற்றிவளைப்பு - அம்பாறையில் முன்னாள் அமைச்சர் கைது
arrest
stf
amparai
former minister
roundup
By Sumithiran
அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் உட்பட 5 சந்தேகநபர்களும் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி